இங்கிலாந்தில் வருகிற 19-ந்தேதி முதல் மாஸ்க் கட்டாயமில்லை!
கொரோனா பரவலால் அதிக உயிர்சேதத்தை சந்தித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. கடும் கட்டுப்பாடுகள், தடுப்பூசி போடுவதை அதிகரித்தன் பலனாக கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இங்கிலாந்தில் முகக் கவசம் அணியும் கட்டுப்பாடு விரைவில் அகற்றப்படும் என இங்கிலாந்த் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியது .
இந்த அறிவிப்பு வரும் 19-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அதன் பிறகு யாரும் முககவசம் அணிய தேவை இருக்காது என கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் தடுப்பூசி போடும் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. அதனால் தளர்வுகளை அறிவித்துள்ளது.
அதே சமயம் கொரோனா பரவல்தான் குறைந்துள்ளது இன்னும் இரு மாதங்களில் உலகையே அச்சுறுத்தும் வைரசாக டெல்டா கொரோனா மாறும் என உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.