மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… சென்னையில் மாஸ்க் கட்டாயம் - மாநகராட்சி உத்தரவு
சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
மாநகராட்சி உத்தரவு
உலகத்தை ஆட்டிப்படைத்து வந்த கொரோனா தொற்றின் தாக்கம் பல்வேறு நாடுகளிலும் சற்று குறையத் தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் அண்மை நாட்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று கடந்த 2 நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நேற்று வெளியான அறிக்கையில், 447 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதில் 248 ஆண்களுக்கும், 199 பெண்களுக்கும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் 102 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35, 75, 380 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 35, 32, 547 பேர் உள்ளது.தமிழகம் முழுவதும் 4,794 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி தொடர்ந்து 2 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணியவும், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்கவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.