‘கையில் மை இருந்தா மாஸ்க் இலவசம்’ : மாஸ் காட்டிய நிறுவனம்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை நிறுவனத்தார் நேற்று வாக்களித்த வாக்காளர்களுக்கு கை விரலில் உள்ள அடையாள மையை ஆதாரமாக கொண்டு தலா ஒருவருக்கு 5 முக கவசங்கள் இலவசமாக வழங்கியுள்ளது. இன்று நாடு முழுவதும் உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பல சுகாதாரத்துறை நிறுவனங்கள் இந்த ஆண்டு கொரோனா தொற்றில் இருந்து விடுபட விழிப்புணர்வு நிகழ்சிகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை நிறுவனத்தார், உலக சுகாதார தினத்தை விழாக்கள் போன்ற நிகழ்சிகளுக்கு பதிலாக இலவசமாக முக கவசங்கள் வழங்கி அத்தினத்திற்கு பெருமை சேர்த்தள்ளனர்.

நேற்று நடைபெற்ற தேர்தலில் வாக்களித்த வாக்களர்களுக்கு அவர்களின் கை விரல் மையை அடையாளமாக கொண்டு முக கவசங்களை வழங்கியிருக்கின்றனர். ஏராளமானோர் தங்கள் கை விரல் மையை காண்பித்து 5 முக கவசங்களை வாங்கிச் சென்றனர். மீண்டும் அதிகமாக பரவி வரும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வாக முக கவசங்கள் வழங்கியதாக இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தார்கள்.