அதிர்ஷ்டம் கொட்டப்போகும் மாசி மாதம் - யாருக்கெல்லாம் திருமணம் நடந்தே தீரும்?
மாசி மாதத்தில் ஐந்து ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது.
சூரிய பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிப்ரவரி 12 ஆம் தேதி இரவு 9.40 மணிக்குப் பெயர்ச்சியாக உள்ளார். இதனால் ஒரு மாத காலத்தில் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிப்பார்கள். எந்தெந்த ராசியினர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
சமுதாயத்தில் புதிய உறவுகள், நண்பர்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலை, தொழில் சார்ந்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால் பண ஆதாயம் பெறுவீர்கள்.
மிதுனம்
ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. திருமண வாழ்க்கை அல்லது காதல் தொடர்பான விஷயங்களில் மகிழ்ச்சிகரமான சூழல் இருக்கும்.
சிம்மம்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பங்குச் சந்தைகளின் லாபம் கிடைக்கும். செய்யும் செயலில் பொறுமையும் நிதானமும் அதிகரிக்கும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய உறவுகள், நண்பர்கள் கிடைப்பார்கள்.
கன்னி
உடல் ஆரோக்கியத்தில் முன்னற்றம் ஏற்படும். நீண்டநாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும்.
கும்பம்
வேலை, கல்வி தொடர்பாக வெளியூர், வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமையால் எடுத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். கணவன், மனைவிக்குள் உறவு மேம்படும்.