சொல்லி அடுத்த கில்லி.. மேரி கோம் அசத்தல் வெற்றி!
டோக்கியோ ஒலிம்பிக்கின் குத்து சண்டை போட்டியில் இந்தியாவின் மேரி கோம் முதல் போட்டியில் அசத்தல் வெற்றியை பெற்றுள்ளார்.
இன்று நடைபெற்ற ஃப்ளை வெயிட் 51 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் மேரி கோம் தனது முதல் சுற்றில் டோமினிகாவின் மிக்குவேலினாவை எதிர்கொண்டார். இரண்டு சுற்றுகள் முடிவில் மேரி கோம் 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்து வந்த நிலையில் 3வது சுற்றில் மேரிகோம் தாக்குதலால் மிக்குவேலினா நிலை குலைந்தார்.
மொத்தமாக 30-27, 28-29, 29-28, 30-27, 29-28 புள்ளிகள் அடிப்படையில் மூன்று சுற்றுகள் முடிவில் மேரி கோம் 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றார்.
இதன் மூலம் 16 பேர் கொண்ட அடுத்த சுற்றுக்கு மேரி கோம் தகுதி பெற்றுள்ளார்.