16 தொகுதிகள் கேட்கும் மார்க்சிஸ்ட்: தயங்கும் திமுக காரணம் என்ன?
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுகவும் அதிமுகவும் தேர்தலில் வெல்ல வியூகத்தை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, திமுக விற்கு ஐபேக் நிறுவனம் பல திட்டங்களை கொடுத்து வருகின்றது. கோடிகணக்கான பணம் கொடுத்து வந்துள்ள ஐபேக் நிற்ய்வனம் தான் திமுக வின் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்தையும் கவனிக்கிறதாம்.
இதனால் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லையென கூட்டணி கட்சிகள் வேதனையில் உள்ளன. விசிக, முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்டவை திமுக கொடுத்த தொகுதிகளை ஏற்றுக் கொண்டு கூட்டணியில் தொடருகின்றன. அதேசமயம் மதிமுக, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திமுகவுடன் மல்லுக் கட்டி வருகின்றது.
இந்த நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது.
அதில் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திமுக விரும்பும் நிலையில், 16 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கேட்பதால் இழுபறி நீடிக்கிறது.