மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது

party dmk candidate marxist
By Jon Mar 13, 2021 12:55 PM GMT
Report

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திமுக-வுடன் கூட்டணி அமைத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கீழ்வேளூர் தொகுதியில் நாகை மாலி, திருப்பரங்குன்றம் தொகுதியில் பொன்னுத்தாய், கந்தர்வக்கோட்டையில் சின்னதுரை, அரூர் தொகுதியில் குமார், திண்டுக்கல் தொகுதியில் பாண்டி, கோவில்பட்டியில் சீனுவாசன் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.