விஷம் குடிச்சு கூட சாவோம், எடப்பாடி பக்கம் போகமாட்டோம் - மருது அழகுராஜ் ஆவேசம்
ஒபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருது அழகுராஜ்
ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் மருது செல்வராஜ் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறவே அதிமுக, பாஜக கூட்டணியிலிருந்து விலகியது.
விஷச்செடிக்கு இரண்டரை ஆண்டுகளாக பாஜக அரசு உரம் போட்டு வளர்த்ததை இப்போது புரிந்துகொண்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஒபிஎஸ் குறித்து பேசுவதற்கு அருகதையற்றவர், ஜெயலலிதாவின் ஜீவ நாடி திமுக எதிர்ப்புதான், தற்காலிக தீர்ப்பினால் அதிமுக அலுவலகத்த்திற்கு ஒபிஎஸ் செல்லவில்லை.
பாஜகவுடன் கூட்டணி?
ஒபிஎஸின் கருத்தை கேட்டு இருந்தால் இன்று அதிமுக மீது ஊழல் வழக்குகள் வந்திருக்காது. மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு என்னோடு சேர்ந்துகொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னார், இதுவரை எத்தனை மன்னிப்பு கடிதம் வந்துள்ளது என்பதை சொல்வாரா?
விஷம் குடித்து செத்தாலும் சாவோம், எடப்பாடி பழனிசாமி பக்கம் செல்ல மாட்டோம்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டணி அமையும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உருவாகும். எந்த தீர்ப்பும் இறுதியானது அல்ல. பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக தலைமை கழகம் இறுதி முடிவு எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.