விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய மார்டின் கப்தில் - செய்த சாதனை என்ன தெரியுமா?
இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியின் மூலம் நியூசிலாந்து அணியின் வீரர் மார்டின் கப்தில் டி.20 போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், நேற்று நடந்த 2வது போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்த போட்டியின் மூலம் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரரும், நட்சத்திர வீரருமான மார்டின் கப்தில் டி20 போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் 11 ரன்கள் எடுத்த போது டி20 போட்டிகளில் 3227 ரன்களை எட்டிய கப்தில், இதன் மூலம் டி.20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.