நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார் மார்ட்டின் கப்தில் - ரசிகர்கள் அதிர்ச்சி

Cricket
By Nandhini 1 வாரம் முன்

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்திலிருந்து மார்ட்டின் கப்தில் வெளியேறியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டி20 உலக கிரிக்கெட் தொடர் -

ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை டி20 தொடருக்குப் பின்னர், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.

இந்த உலக கோப்பை T20 தொடர் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டனர். நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒரு நாள் போட்டியில் ஷிகர் தவான் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

சமீபத்தில் நடைபெற்ற இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேப்பியரில் நடந்தது. இப்போட்டியில், தொடர் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனால், 3வது டி20 போட்டி சமனில் முடிந்தது. இந்த ஆட்டம் சமனில் முடிந்தாலும் ஏற்கனவே 2வது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

martin-captil-cricket-sports

மார்டின் கப்தில் வெளியேற்றம்

இந்நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்திலிருந்து அதிரடி வீரர் மார்டின் கப்தில் வெளியேறி இருக்கிறார். நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரது கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டது.

போல்ட் மற்றும் காலின் டி கிராண்ட்ஹோம் ஆகியோருக்குப் பிறகு, இந்த ஆண்டு மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட 3வது வீரர் கப்தில் ஆவார்.

இது குறித்து கப்தில் பேசுகையில், என் நாட்டிற்காக விளையாடுவது ஒரு பெரிய கவுரவம். மேலும், நியூசிலாந்து அணியில் உள்ள அனைவருக்கும் அவர்களின் ஆதரவிற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்றார்.