திருமணமானல் அந்த மூன்று நாட்களுக்கு தடை : இந்தோனேசியாவில் விநோத சடங்கு

By Irumporai May 22, 2022 08:14 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

 இந்தோனேசியாவில் திருமணம் முடிந்த தமபதிகள் 3 நாட்களுக்கு கழிவறை உபயோகப்படுத்தக் கூடாது என்ற வினோத பழக்கம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

திருமணம் என்றாலே  சில விநோதமான சடங்குகள் இருக்கும்அந்த வகையில் ,இந்தோனேசியா நாட்டில் உள்ள பழங்குடியின மக்களிடையே ஒரு திருமண சடங்கின் போது ஒரு விநோத பழக்கம்தான் தற்போது பரவலாக பேசப்படுகிறது 

இந்தோனேசியா மற்றும் மலேசிய வடகிழக்கு பகுதியில் போர்னியோ என்ற பகுதி உள்ளது, இந்த பகுதியில் திடாங் என்ற பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர் , இந்த பழங்குடியின சமூகத்தில் திருமணம் நடக்கும் போது , திருமணம் முடிந்த மூன்று நாட்களுக்கு திருமணமான தம்பதிகள் கழிவறை உபயோகிக்க கூடாது என்ற விநோத பழக்கம் அமலில் உள்ளது.

இந்த பழக்கதினை மீறும் தம்பதிகள் வாழ்வில் திருமண வாழ்வில் முறிவு , தனது துணைக்கு துரோகம் செய்வது ,குழந்தைகள் பிறந்தால் உயிரிழப்பது போன்ற துயர சம்பவங்கள் நடக்கும் என நம்பிக்கை உள்ளது.

ஆகவே திருமணம் ஆகும் தம்பதிகள் எங்கே இந்த சடங்குகளை கடைபிடிக்காமல் போய்விடுவார்களோ என கண்காணிக்க தனி நபர்களை அமைப்பார்களாம் இந்த பழங்குடியின மக்கள் .

அதே சமயம் திருமணமான தம்பதிகளுகு இந்த சடங்கு அமலில் இருக்கும் மூன்று நாட்களுக்கு குறைந்த அளவிலான உணவும் நீரும் கொடுக்கும் மூட  அரங்கேறுமாம், 3 நாட்கள் முடிந்த பின்னர், அந்த தம்பதியை குளிக்க வைத்து, கழிவறையை பயன்படுத்த அனுமதி அளித்து விடுவார்கள்.

திருமணமானல் அந்த மூன்று நாட்களுக்கு தடை : இந்தோனேசியாவில் விநோத சடங்கு | Married Young Coupletoilet For 3 Days Strange

எப்போதெல்லாம் இந்த பழங்குடியின மக்களிடையே திருமண நிகழ்ச்சி நடக்கிறதோ அப்போதெல்லாம் இந்த  முட்டாள் தனமான சடங்கும் அரங்கேறுகிறது , திருமணம் முடிந்த பிறகு அந்த தம்பதிகள் மூன்று நாட்கள் மிகவும் கொடூரமானதாக இருக்கும்.

இந்த மூன்று நாட்களில் திருமணமான தம்பதிகள் வெற்றிகரமாக சடங்கினை முடித்துவிட்டால் திருமண வாழ்வு நன்றாக இருக்கும் என நம்புகின்றனர் இந்த பகுதி மக்கள்.திருமணத்தில்  சடங்குகளும் சம்பிரதாயங்களும் உருவாக்கியது மனிதர்கள் தான் இந்த நவீன  யூகத்திலும் இது போன்ற மூடத்தனமான் நம்பிக்கை மாற வேண்டும் என்பதுதான் பலரது கருத்து.