இளம்பெண் வாயில் வெடிவைத்து கொடூரமாக கொன்ற கள்ளக்காதலன் - பகீர் சம்பவம்!
திருமணம் மீறிய உறவில் இருந்த பெண்ணை கள்ளக்காதலன் கொலை செய்துள்ளார்.
தகாத உறவு
கர்நாடகா, கெரசனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரக்ஷிதா(20). இவரது கணவர் கேரளாவில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் பெட்டதபுரா கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜூ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் சலிகிராமா கிராமத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
அதில் சித்தராஜு, தான் மறைத்து கொண்டுவந்த வெடிமருந்தை ரக்ஷிதாவின் வாயில் அடைத்து அதை வெடிக்கச்செய்துள்ளார். இதில், ரக்ஷிதாவின் முகம் முழுவதுமே வெடித்து சிதறியுள்ளது.
காதலன் வெறிச்செயல்
சம்பவ இடத்திலேயே ரக்ஷிதா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின் தப்பிஓட முயன்ற சித்தராஜூவை விரைந்து சென்று ஊழியர்கள் பிடித்து போலீஸில் புகாரளித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், சித்தராஜுவை கைது செய்தனர்.
தொடர் தீவிர விசாரணையில், திருமணத்துக்கு முன்பே, ரக்ஷிதாவுக்கு, சித்தராஜூவுக்கும் காதல் இருந்து வந்துள்ளது. ரக்ஷிதாவுக்கு திருமணமாகியும் இந்த கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது.
ஆனால், அவர் எதற்காக கொலை செய்தார்? இவர்களுக்குள் என்ன தகராறு நடந்தது? என தெரியவில்லை. தற்போது அதற்கான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.