14 வயது சிறுவனுடன் காதல் வயப்பட்ட ஆறு குழந்தைகளின் தாய் - கடைசியில் நிகழ்ந்த அதிர்ச்சி
திருமணமாகி 6 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் 14 வயது மைனர் சிறுவனை காதலித்து அவனுடன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலுக்கு கண் இல்லை என்பது போல் சில சமயங்களில் அதற்கு வயது வித்தியாசமும் இல்லாமல் போவது உண்மை என அவ்வப்போது நிகழும் சம்பவங்கள் நிகழ்த்தும்.
அந்த வகையில் குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தின் பஃதேபுரா தாலுகாவின் சக்ரபதா எனும் கிராமத்தைச் சேர்ந்த 40 வயதாகும் பெண் ஒருவர் காந்தி நகரில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்பெண் திருமணமாகி கணவர் மற்றும் 6 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இதனிடையே தன்னுடன் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த அம்லிகேதா கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனை திருமணமான அப்பெண் காதலித்து வந்துள்ளார். இருவரின் காதலும் வளர்ந்த நிலையில் சிறுவனுடன் செல்ல முடிவு செய்தும் உள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனது கணவர் மற்றும் 6 குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு சிறுவனுடன் சென்று அப்பெண் தலைமறைவாகினார். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் 14 வயதாகும் தன் மகனை அப்பெண் கடத்திச் சென்றுவிட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் போலீசாரின் விசாரணையின்படி தந்தைக்கும் மகனுக்குமான தொலைபேசி உரையாடலில் சிறுவன் தான் 1997-ல் பிறந்தவன், எனக்கு சட்டப்படியான வயது இருப்பதாக தெரிவித்திருக்கிறான்.
இதனால் குழப்பமடைந்துள்ள போலீசார் தந்தையிடம் சிறுவனின் பிறப்பு சான்றிதழை கொண்டுவரும்படி தெரிவித்திருக்கின்றனர். சிறுவனுக்கு மைனர் வயது என்பது உறுதியானால் மட்டுமே போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியும் எனவும்தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. https://tamil.news18.com/news/national/married-woman-elopes-with-14-year-minor-boy-aru-629285.html