முதலிரவு முடிஞ்சதும் மூட்டை கட்டிய மனைவி - புது மாப்பிள்ளையை புது ரூட்டில் ஏமாற்றிய கும்பல்!
கல்யாணம் முடிந்ததும் நகை பணத்தோடு ஓட முற்பட்ட ஒரு மணப்பெண்ணின் மோசடி கூட்டத்தை போலீஸ் கைது செய்தது.
மத்திய பிரதேசத்தின் சத்தர்பூரில் ஒரு கூட்டம் புது ரூட்டில் திருமண மோசடி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் படி அந்த கூட்டம் கல்யாணத்திற்கு மேட்ரிமோனியல் மூலம் பெண் தேடும் கிராமப்புற பணக்கார மாப்பிள்ளைகளை குறி வைப்பார்கள்.பிறகு அந்த மாப்பிள்ளைக்கு பெண் ஏற்பாடு செய்வது போல பேசி ஒரு பெண்ணை கல்யாணம் செய்து வைப்பார்கள் .அதன் பிறகு அந்த வீட்டிலிருந்து நகை பணத்தை கொள்ளையடித்ததும் ,அந்த பெண் அங்கிருந்து தலைமறைவாகி விடுவார் அதன்படி அந்த கூட்டம் சத்தர்பூரில் ஒரு பணக்கார வாலிபரை குறி வைத்தது. அந்த மாப்பிளைக்கு சமீபத்தில் கல்யாணம் செய்து வைத்தனர் ,அப்போது அவர்கள் அந்த பெண்ணுக்கு தங்களை உறவினர் என்று கூறி இந்த கல்யாணத்தை நடத்தி வைத்தனர். பிறகு திருமணமான ஒரு நாள் கழித்து,முதலிரவு முடிந்ததும் அந்த பெண் அந்த வீட்டிலிருந்த நகை பணத்தையெல்லாம் எடுத்து வைத்துக்கொண்டார்.
பின்னர் அந்த பெண்னின்
உறவினர் என்று கூறி, ஒருவர் அந்த பெண்ணை தங்களின் வீட்டுக்கு அழைத்து செல்ல வந்தார் ஆனால் அந்த மாப்பிள்ளைக்கு அந்த நபர் மீது சந்தேகம் வந்து, அந்த புது மனைவியை அவருடன் அனுப்ப மறுத்து விட்டார். பின்னர் அவர் மீது பொலிஸில் புகார் கொடுத்தார் .போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்த போது இந்த மோசடி கூட்டத்தின் தில்லுமுல்லு தெரிய வந்ததும், அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.