டேட்டிங் செயலியில் திருமணமானவர்கள் தான் அதிகம் : வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்தியாவில்திருமணம் ஆனவர்கள்தான் அதிகமாக டேட்டிங் செயலிகளில் கணக்கு வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டேடிங் செயலி
இந்தியாவில் தற்போது டேடிங் செயலி உள்ளது, இதன் மூலமாக ஆண் பெண் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள நட்பாக புரிந்து கொள்ள உதவும் செயலி என கூறப்பட்டாலும் தற்போது தவறான பாதைக்கே அழைத்து செல்வதாக கூறுகின்றனர் .

அதிகம் திருமணம் ஆனவர்கள்
இந்தியாவில் இளம் வாலிபர்கள் மற்றும் பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் லிவ் இன் முறை மற்றும் டேட்டிங்கில் சமீப காலத்தில் அதிகமான ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.
இதனால் பல்வேறு டேட்டிங் செயலிகள் இந்தியாவில் அதிகமான இளைஞர்களிடையே புழக்கத்தில் இருந்து வருகிறது இந்த நிலையில் இந்தியாவில் உள்ள டேடிங் செயலியில் 10 லட்சம் திருமணமான இந்தியர்களும் கணக்கு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் இந்தியாவில் திருமணம் மீதான நம்பிக்கைகள் உடைந்து வருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது