திருமணமான 4 மாதத்தில் சிறுமி தற்கொலை!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே திருமணமான 4 மாதத்தில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வீரமலை பகுதியை சேர்ந்த பிரேம்குமார், கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கும் சூளகிரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சிறுமிக்கு விருப்பமின்றி பெற்றோர்கள் வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவைத்துள்ளதால் மன உளைச்சலிலேயே சுற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.            

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்