சிம்புவுடன் திருமணம்? உறுதிசெய்த இளம்நடிகை!
சிம்புவுடனான திருமண செய்திக்கு இளம் நடிகை முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சிம்புவுடன் திருமணம்?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. தற்போது கமலுடன் இணைந்து ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து தனது 49-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதற்கிடையில், சிம்புவின் காதல் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாவது வழக்கம்தான். அந்த வரிசையில் தற்போது நிதி அகர்வாலுடன், சிம்பு காதலில் இருப்பதாக செய்தி வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ள நிதி அகர்வால்,
நடிகை விளக்கம்
“ஜெயம் ரவியுடன் தமிழில் ‘பூமி’ படத்தில் நடிக்க கமிட்டான போது சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு படங்களும் வெளியாவதற்கு முன்பாகவே உதயநிதி ஸ்டாலினின் ‘கலகத் தலைவன்’ படத்திலும் வாய்ப்பு கிடைத்தது.
திரைத்துறை என்று வந்து விட்டாலே அவர்களை பற்றி வதந்திகள் வருவது சகஜம்தான். மக்களுக்கும் இந்த வதந்திகள் குறித்து ஆர்வம் இருப்பதால் அது வேகமாக பரவுகிறது.
அதை எல்லாம் நான் பொருட்படுத்தப் போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார். பவன் கல்யாண், நிதி அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹரிஹர வீரமல்லு’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து பிரபாஸுடன் ராஜா சாப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.