திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் வீராங்கனைகள் - வைரலாகும் புகைப்படம் - ஷாக்கான ரசிகர்கள்
கடந்த 2019ம் ஆண்டு ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.
அதேபோல், தற்போது இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த கேத்தரின் பிரண்ட் - நாட் செவர் ஆகிய வீராங்கனைகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
2017ஆம் ஆண்டுக்கான பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கேத்தரின் மற்றும் நாட் செவர் ஆகிய இருவரின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.
ஒரு பால் சேர்க்கையாளரான இவர்கள், ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
