38 வயது கொண்ட பெண்ணை 66 வயது கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் திருமணம் செய்தார் - வைரலாகும் புகைப்படம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அருண் லால் தன்னைவிட 28 வயது குறைவான பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
அருண் லால் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 1982 முதல் 1989 வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக 16 டெஸ்டுகள், 13 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார்.
கடந்த 2016-ம் ஆண்டு அருண் லாலுக்கு தாடை புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, புற்றுநோயிலிருந்து அருண் லால் மீண்டு வந்தார். தற்போது, பெங்கால் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், அருண் லால் தனது 66-வது வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார். புல்புல் சஹா என்ற 38 வயதான பெண்ணை அருண் லால் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், அருண் லால் - புல்புல் சஹா இருவரும் கொல்கத்தாவில் நேற்று முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

