பெற்ற மகளை தந்தையே திருமணம் செய்த கொடூரம்...? - வைரலாகும் புகைப்படம் - ஷாக்கான மக்கள்

By Nandhini Apr 27, 2022 10:12 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. 18 வயது கொண்ட இளம் பெண்ணை தந்தையே திருமணம் செய்துக்கொண்டதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

அந்தப் புகைப்படத்துடன், திருமணச் சான்றிதழ் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் செல்ல, இது சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், இத்திருமணம் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது. மணமகன் பெயர் சாடோதரா தினேஷ் குமார் என்றும், மணமகள் பெயர் ஸாபாடியா சீத்தால்பென். அப்பெண்ணின் தந்தையின் பெயர் ஸாபாடியா தஸ்ரத்பாய்.

இத்திருமணம் கடந்த 4ம் தேதி நடந்துள்ளது. இவர்கள் இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் 18 வயதை கடந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணம் செல்லும் என்றும் அதனாலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

ஆதலால், இச்செய்தி பொய் என்று நிரூபணமாகியுள்ளது.