ராகுல் காந்திக்கு திருமணம்? எனக்கு பெண் இப்படி தான் வேண்டும் - இவ்வளவு எதிர்ப்பார்ப்பா..!

Indian National Congress Rahul Gandhi India
By Thahir Dec 29, 2022 03:32 AM GMT
Report

காங்கிரஸ் கட்சியின் எம்பியும் சோனியா காந்தியின் மகனான ராகுல் காந்தி தனக்கு திருமணம் எப்போது? என்ற தகவலை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

52 வயதாகியும் திருமணம் செய்யாத ராகுல் காந்தி 

முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி இவருக்கு தற்போது 42 வயதாகிறது.

கடந்த 1970 ஆம் ஆண்டு பிறந்த இவர் பிறந்த இவர் 52 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Marriage to Rahul Gandhi? I want a girl like this

ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி தொழில் அதிபரான ராபர்ட் வதேரா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளன.

2 குழந்தைகளும் திருமணம் செய்யும் வயதை எட்டிய நிலையில் ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பொதுவாக 25 முதல் 30 வயதுக்குள் திருமணத்தை முடித்து விடுவார்கள் என்ற நிலையில் ராகுல் காந்தி 50 வயதை கடந்த நிலையிலும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வரப்போகும் மனைவி இப்படி தான் இருக்க வேண்டும் 

திருமணம் பற்றி ராகுல் காந்தி பலமுறை பேசியிருந்தாலும், இந்திய ஒற்றுமை பயணத்தில் தனது திருமணம் பற்றி பேசியுள்ளார்.

திருமணம் பற்றி பேசிய அவர் தனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தனக்கு வரப்போகும் மனைவி தாய் சோனியா காந்தி மற்றும் பாட்டி இந்திரா காந்தி ஆகியோரின் குணங்களை கொண்ட கலவையாக இருக்க வேண்டும். இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.

தனது பாட்டி இந்திரா காந்தி தனது 2வது தாய் என்றும் தன்னை மிகவும் அன்புடன் நடத்தியவர் என்றும் அவருடைய அன்பை தரும் வகையில் தனது வருங்கால மனைவி இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்திக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று தெரியவில்லை என்றாலும் பிரதமரான பின்னர் தான் திருமணம் என்ற கொள்கையில் அவர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.