திருமணத்தை நிறுத்திய சிபில் ஸ்கோர் - இறுதி நேரத்தில் பெண்ணின் மாமா கேட்ட கேள்வி

Maharashtra Marriage
By Karthikraja Feb 09, 2025 05:00 PM GMT
Report

 மணமகனின் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்ததால் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.

திருமணம் நிறுத்தம்

இந்தியாவில் திருமணம் செய்வதற்கு இருவரின் மனம் ஒத்திருந்தால் மட்டும் போதாது. ஜாதகம், குடும்ப பின்னணி, ஜாதி, பொருளாதாரம் ஆகியவை திருமணத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

marriage stops due to cibil score

அதையெல்லாம் தாண்டி திருமணம் நிச்சயிக்கப்பட்டால் கூட, சில திருமணங்களில் சாப்பாடு சரியாக இல்லாமல் இருப்பது, மணமகனின் நண்பர்கள் மேடையில் செய்யும் அட்டூழியம் போன்ற காரணங்களால் கூட கடைசி நேரத்தில் திருமணம் நின்றுள்ளது.

மணமகனின் சிபில் ஸ்கோர்

இதே போல் மணமகனின் சிபில் ஸ்கோரால் ஒரு திருமணம் நின்றுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் அமராவதி முர்திஜாபூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திருமணத்திற்குப் பெண் பார்த்து திருமணம் நிச்சயம் செய்துள்ளனர்.

திருமணத்திற்கு சில நாள் இருக்கும் முன் பெண் வீட்டாரும் மாப்பிளை வீட்டாரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, மணப்பெனின் மாமா,  மாப்பிள்ளையிடம் உங்களது சிபில் ஸ்கோரை(CIBIL Score) காட்டுமாறு கூறியுள்ளார்.

மாப்பிளை தனது சிபில் ஸ்கோரை காட்டிய போது, அவருக்கு வெவ்வேறு வங்கிகளில் பல கடன்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. சில கடன்களை கட்டாமல் அவரின் CIBIL ஸ்கோரும் குறைவாக இருந்திருக்கிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், நீங்கள் கடனில் இருக்கும் போது எப்படி எங்கள் பெண்ணை நன்றாக பார்த்துக்கொள்வீர்கள் என கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளனர். சிபில் ஸ்கோரால் திருமணம் நின்றது மணமகன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிபில் ஸ்கோர் என்றால் என்ன?

CIBIL ஸ்கோர் என்பது ஒரு நபரின் கடன் வரலாற்றை கூறும் 300 முதல் 900 வரை உள்ள மூன்று இலக்க எண்ணாகும். CIBIL ஸ்கோர் அதிகமாக இருந்தால் நல்ல நிதி நிர்வாகத்தையும், குறைவாக இருந்தால் மோசமான நிதி நெருக்கடியில் இருப்பதையும் குறிக்கும். 

what is cibil score in tamil

கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தாது போன்ற காரணங்களால் சிபில் ஸ்கோர் குறையும். வங்கிகள் ஒரு நபருக்கு கடன் வழங்க அவரின் சிபில் ஸ்கோரை முக்கிய காரணியாக கருத்தில் கொள்கிறது.