இந்திய கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாக்கூருக்கு விரைவில் டும்..டும்..டும்.. - குவியும் வாழ்த்துக்கள்
இந்திய கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாக்கூருக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாக்கூர் திருமணம்
இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் மட்டுமல்ல, ஷர்துல் தாக்குரும் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
இந்திய வேகப் பந்து பந்துவீச்சாளரான ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குர், மித்தாலி பருல்கர் என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். மும்பைக்கு அருகில் உள்ள கர்ஜாத் நகரில் திருமண விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் பிப்ரவரி 25ம் தேதி தொடங்க உள்ளன. ஷர்துல் தாக்கூரின் வருங்கால மனைவி பருல்கர் ஒரு தொழிலதிபர் ஆவார்.
இந்த திருமணத்தில் சுமார் 200-250 விருந்தினர்கள் வருகை தர உள்ளனர். கடந்த ஆண்டு 2021ம் ஆண்டு ஷர்துல் தாக்கூருக்கு நிச்சயதார்த்தம் ஆனது.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாக்கூருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.