நடிகை சித்ராவின் தற்கொலைக்கு முக்கிய காரணம் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தொடர் தான் - நண்பரின் பரபரப்பு வாக்குமூலம்

tamil mullai serial
By Jon Jan 22, 2021 04:08 PM GMT
Report

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒரு முக்கிய காரணம் என ஹேம்நாத்தின் நண்பர் செய்யது ரோகித் தெரிவித்துள்ளார். சின்னாத்திரை நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதில் அவரது வருங்கால கணவர் ஹேம்நாத்தைப் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதன் பெயரில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஹேம்நாத்தின் நண்பரான செய்யது ரோகித் என்பவர் பரபரப்பு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஹேம்நாத்தின் நடவடிக்கைகள் மிருகத்தனமாக இருந்ததாகவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை காரணம் காட்டி அவன் சித்ராவை கடித்து குதறி அணுஅணுவாக சித்ரவதை செய்து வந்ததாக கூறியுள்ளார்.

மருத்துவரான தனது மனைவியிடமும், தனக்கு தெரிந்த மருத்துவரிடமும் சென்று சித்ராவின் கன்னித்தன்மையை பரிசோதிக்க எளிய வழிமுறையை கூறுமாறு ஹேம்நாத் கேட்டதாகவும், அவரது டார்ச்சரால் சித்ரா நரக வேதனை அடைந்ததாகவும் கூறப்படுகின்றது. சித்ராவிடம், பத்தினி என்பதை நிரூபிக்க செத்துப்போ என்று மிரட்டி அடித்து உதைப்பதை ஹேம்நாத் வாடிக்கையாக்கியதாக சுட்டிக்காட்டப்படுகிறது. 

 ஹேம்நாத்தை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற 4 முக்கிய பிரமுகர் உதவுவதாகவும், சித்ராவுக்கு நேர்ந்த கொடுமைகள் அனைத்தும் ஹேம்நாத்தின் தந்தைக்கு தெரியும் என்றும் ஹேம்நாத்தை எக்காலத்திலும் ஜாமீனில் விடக்கூடாது என்றும் ஆதங்கம் தெரிவித்துள்ளார் செய்யது ரோகித்.