இந்த சின்ன வயசுல கல்யாணமா? , நான் இந்த சட்டத்தை ஆதரிக்கிறேன் : நடிகை ஒவியா

oviya support marriageage
By Irumporai Jan 13, 2022 06:01 AM GMT
Report

பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 ஆக இருக்கும் நிலையில், அதை மேலும் மூன்று ஆண்டுகள் உயர்த்தும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது.

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18ஆக சட்டரீதியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் குழந்தை திருமணங்கள் குறித்த தகவல்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து, குறிப்பாக ஊரகப்பகுதிகளில் அதிகம் நடந்து வருவதாக தகவல்கள் வெளியானதால்.

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தியுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திருமண வயதை உயர்த்தியதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நடிகை ஒவியா ஆதரித்துள்ளார், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் :

திருமண வயதை அதிகரித்துள்ளது சரியான முடிவு .

பெண்கள் சிறு வயதிலேயே பல விஷயங்களைத் தியாகம் செய்து மிகப் பெரிய பொறுப்புகளைச் சுமக்கத் தேவையில்லை, இந்த சட்டத்தை வலுவாக ஆதரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.