திருமணத்தில் குறுக்கே வந்த காதலன்! காதலனை சுட்டு கொன்ற வருங்கால கணவன்!
மத்திய பிரதேசத்தில், ஒரு பெண்ணின் கல்யாணத்திற்கு குறுக்கே வந்த காதலனை அவரின் வருங்கால கணவன் சுட்டு கொன்ற சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் பவன் என்பவருக்கு ஒரு பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வரும் 27-ம் தேதி நடைபெற இருந்தது.
இந்த நிலையில் அந்த பெண்ணின் முன்னாள் காதலர் குல்வீர் திடீரென அவர்களின் திருமணத்திற்கு குறுக்கே வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை புதுமாப்பிள்ளையை சந்தித்த காதலன், இந்த திருமணத்தை நிறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனை மறுத்த பவன், ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து குல்வீரை சுட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் மிதந்த குல்வீரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், பவனையும் பவனின் சகோதரர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.