தன்னைத்தானே திருமணம் - அறிவித்த தேதியை விட 3 நாட்களுக்கு முன்பே திருமணம் செய்த ஷாமா பிந்து

By Nandhini Jun 09, 2022 07:07 AM GMT
Report

குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் அறிவித்த தேதியை விட 3 நாட்களுக்கு முன்பே தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டுள்ளார். 

குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து (24 ). எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பட்டம் பெற்றுள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஷாமாவும் மற்ற இந்திய பெண்களைப் போலவே ஜூன் 11ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக அறிவித்தார்.

ஆனால், இத்திருமணம் மணமகன் இல்லாமல் தன்னையே திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். திருமணம் முடிந்த பிறகு 2 வாரம் ஹனிமூனுக்கும், கோவாவுக்கும் செல்ல போவதாக தகவல் தெரிவித்தார்.

தன்னைத்தானே திருமணம் - அறிவித்த தேதியை விட 3 நாட்களுக்கு முன்பே திருமணம் செய்த ஷாமா பிந்து | Marriage Itself Shama Bindu

இதுகுறித்து ஷாமா பிந்து கூறுகையில் :

சிறு வயதில் இருந்தே திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று நினைத்தேன். திருமணம் என்னும் பாரம்பரியம் என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால், நான் ஒரு மணமகளாக வேண்டும் என விரும்பினேன். அதனால், என்னை நானே மணந்துகொள்ள முடிவு செய்தேன் எனக் கூறினார். மேலும் பிரபல நடிகை ஒருவர் , எல்லா பெண்களும் மணமகளாக விரும்புகிறார்களே தவிர மனைவியாக அல்ல என பேசியிருப்பார்.

இதைக் கேட்டவுடன் என்னை நானே மணந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மீண்டும் தோன்றியது. இதுபோன்று இந்தியப் பெண்கள் யாராவது திருமணம் செய்திருக்கிறார்களா என்று ஆன்லைனில் தேடிப் பார்த்தேன். ஆனால், யாரும் அப்படி செய்துகொள்ளவில்லை. திருமணத்தைப் புனிதமாகக் கருதும் இந்திய நாட்டில் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் முதல் பெண் நானாகத்தான் இருப்பேன் என கூறியுள்ளார்.

தன்னைத்தானே திருமணம்

மேலும், பெண்கள் தாங்கள் விரும்புபவரை திருமணம் செய்து கொள்வார்கள். இந்த திருமணம் மூலம் என்னை நானே காதலிக்கப் போகிறேன். என்னுடைய பெற்றோர் இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கும் இதில் மகிழ்ச்சிதான் என்றும் தனது திருமணம் ஜூன் 11ம் தேதி மாலை 5 மணிக்கும் நடைபெறவுள்ளது என்றார்.

தன்னைத்தானே திருமணம் - அறிவித்த தேதியை விட 3 நாட்களுக்கு முன்பே திருமணம் செய்த ஷாமா பிந்து | Marriage Itself Shama Bindu

எதிர்ப்பு 

இப்பெண்ணின் அறிவிப்பால், சலசலப்பும், சர்ச்சையும் ஏற்பட்டது.

சமீபத்தில், தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும் திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானது. இதனால் இந்துக்களின் மக்கள் தொகை குறையும். எந்தக் கோவிலிலும் இப்படியான திருமணம் நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று பாஜகவின் சுனிதா சுக்லா கருத்து தெரிவித்திருந்தார்.

திருமணம்

இந்நிலையில், அறிவித்த தேதியை விட 3 நாட்களுக்கு முன்பே வதோதராவில் திருமணம் செய்து கொண்டுள்ளார் ஷாமா பிந்து.      

தன்னைத்தானே திருமணம் - அறிவித்த தேதியை விட 3 நாட்களுக்கு முன்பே திருமணம் செய்த ஷாமா பிந்து | Marriage Itself Shama Bindu