இப்போதைக்கு சிம்புவுக்கு திருமணம் இல்லை - மீண்டும் ரசிகர்கள் ஏமாற்றம்..!

Silambarasan Tamil Cinema Marriage
By Thahir Feb 25, 2023 12:22 PM GMT
Report

இலங்கை பெண்ணுடன் நடிகர் சிம்புவுக்கு திருமணம் என்று செய்திகள் வெளியான நிலையில் அதில் உண்மையில்லை என்று சிம்பு தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

சிம்புவுக்கு திருமணம் இல்லை 

இது தொடர்பாக சிம்புவின் மேலாளர் தரப்பிலிருந்து வெளியிடபட்டுள்ள செய்திக் குறிப்பில், 'இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவரை நடிகர் சிம்பு திருமணம் செய்ய உள்ளதாக சில செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். அதில் எந்தவித உண்மையுமில்லை.

இப்போதைக்கு சிம்புவுக்கு திருமணம் இல்லை - மீண்டும் ரசிகர்கள் ஏமாற்றம்..! | Marriage Is No More Silambarasan Tr Explanation

திருமணம் போன்ற தனிப்பட்ட விஷயங்கள் குறித்த செய்திகளை வெளியிடும்போது ஊடகங்கள் தகவலை உறுதி செய்த பின்னர் வெளியிட வேண்டுகிறோம். அப்படி ஒருவேளை திருமணம் குறித்த தகவல் உறுதியானால் நாங்களே முதலில் உங்களிடம் சொல்வோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இந்த முறையும் சிம்புவுக்கு திருமணம் இல்லை என்று அவர் தரப்பு விளக்கம் அளித்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.