திருமணத்துக்கு முன் மாப்பிள்ளை போட்ட ஒப்பந்தம் - வெறித்தனமான CSK ரசிகரா இருப்பாரோ!
திருமணத்தின் போது, சிஎஸ்கே போட்டிகளை தடையின்றி பார்க்க அனுமதிக்குமாறு தனது மனைவிக்கு ஒருவர் ஒப்பந்தத்தை போட்டுள்ளார்.
சிஎஸ்கே போட்டி
துருவ் மஜேத்தியா என்ற மணமகன், தனது மணமகள் ஆஷிமா கக்கர்-க்கு திருமண மேடையில் ஒரு சட்டபூர்வமற்ற ஒப்பந்தத்தை வழங்கினார். அதைப் பார்த்து வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

அதை மணமகள் ஆஷிமா சத்தமாக வாசித்தார். இதனை மஜேத்தியா தனது இன்ஸ்டா பக்கத்தில், "நான், கீழே கையொப்பமிட்டுள்ள மணமகன் துருவ் மஜேத்தியா, ஆஷிமா, எதிர்காலத்தில் எம்.எஸ். தோனி, சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளின் அனைத்துப் போட்டிகளையும் நான் தடையின்றிப் பார்க்க அனுமதித்தால்,
மணமகன் கண்டிஷன்
நான் மனபூர்வமாகவும், மகிழ்ச்சியுடனும், மேற்கொண்டு பேச்சுவார்த்தை இல்லாமல், அவளை மணந்துகொள்கிறேன் என்று இதன் மூலம் அறிவிக்கிறேன்." என குறிப்பிட்டிருந்தார். மஜேத்தியா எம்.எஸ். தோனியின் தீவிர ரசிகர்.

அவரது பயனர் பெயரின் முடிவில், தோனியின் பிரபலமான ஜெர்சி எண்ணான '7' உள்ளது. மேலும், தோனியுடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதில், தோனியைச் சந்தித்தபோது தான் அவரது கால்களைத் தொட்டு வணங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.