கொரோனா மருத்துவமனையில் நடந்த கோலாகல திருமணம்

covid 19 kerala
By Fathima Apr 26, 2021 04:28 AM GMT
Report

கேரளாவில் கொரோனா மருத்துவமனை ஒன்றில் திருமணம் நடைபெற்ற ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத் மோன், இவருக்கும் அபிராமி என்ற பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடத்த பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது.

அதற்குள், சரத் மோனுக்கும், அவரது தாயாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட வந்தனம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் திருமணத்தை நடத்த இருவீட்டாரும் முடிவு செய்து, அதற்கான அனுமதியையும் பெற்றனர்.

இதன்படி, மணப்பெண் அபிராமி கொரோனா கவச உடைகளுடன் மருத்துவமனைக்கு வந்து சரத் மோனை கரம் பிடித்தார், மருத்துவர்களும், இதர பணியாளர்களும் உடனிருந்து மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

கொரோனா மருத்துவமனையில் நடந்த கோலாகல திருமணம் | Marriage Held In Corona Hospital Kerala