திருமணமான சில நாட்களில் 51 சவரன் நகை, காருடன் மனைவி தப்பியோட்டம் - கணவன் அதிர்ச்சி

Kerala Marriage Love Escape
By Thahir Oct 30, 2021 04:20 AM GMT
Report

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இளம்ஜோடிக்கு இரு வாரங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. புதுப்பெண் மாமியார் வீட்டில் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்துவந்துள்ளார்.

இந்த நிலையில் அப்பெண் இரண்டு வாரங்களுக்கு பின்னர் காரில் சென்றுவிட்டார். அதன்பின்னர் புதுப்பெண் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் வீட்டார் அவரை வலை வீசி தேடத்தொடங்கினர். அவரது மொபைல் எண்ணை தொடர்புக்கொண்டும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இளம்பெண்ணின் தந்தை இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

பின்னர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அதன்முடிவில் வெளியான தகவல் புதுப்பெண்ணின் கணவர் வீட்டாராரையும் அப்பெண்ணின் வீட்டாரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

விசாரணையில் அந்தப்பெண் காதலனுடன் ஓடிப்போனது தெரியவந்தது. இதனையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸார் காதலனுடன் இருந்த பெண்ணை காவல்நிலையம் அழைத்து வந்தனர்.

இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர். அந்தப்பெண் போலீஸாரிடம் தனது குடும்பத்தினருடன், கணவருடனும் செல்வதற்கு விரும்பவில்லை.

நான் காதலனுடன் செல்லவே விரும்புவதாக கூறியுள்ளார். இளம்பெண்ணின் காதலன் திருமணத்துக்கு முன்பே வந்து பெண் கேட்டதாகவும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்தப்பெண் சில நகைகளை தனது குடும்பத்தினரிடம் திருப்பி அளித்துள்ளார். அந்தப்பெண் எஸ்.பி.ஐ வங்கியில் கலெக்‌ஷன் ஆபிசராக பணியாற்றி வருவது தெரியவந்தது.