வில்லியான நல்லி - கல்யாணமே வேணாம் என்ற மாப்பிள்ளை - கலங்கிய பெண்..!
நல்லி எலும்பால் திருமணம் நின்று போன சம்பவம் ஒன்று குறித்தான செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நல்லி எலும்பு இல்லை
ஒரு திருமணத்தை நடத்த 1000 பொய்களை சொல்லலாம் என கூறுபவர்கள் மத்தியில், இங்கு ஒரு திருமணம் வெறும் நல்லி எழும்பிற்காக நின்று போயுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நஹ்டியா பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் நிசாமாபாத் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இடையே பெரியோர்களால் நிச்சயம் நடைபெற்று இருக்கின்றது.
இதனையடுத்து நிச்சயதார்த்த மணமகள் வீட்டார் சார்பில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த விருந்தில் நடைபெற்றபோது மணமகன் வீட்டார் கூறிய நல்லியானது பந்தியில் வைக்காமல் விடப்பட்டுள்ளது.
போலீசால் கூட...
இதன் தங்களை அவமதித்தாக கருதிய மணமகன் வீட்டார் கோபமடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து, பெண் வீட்டாரிடம் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இரு தரப்பினருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே மண்டபத்திற்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால் முயற்சி தோல்வி அடைந்து இறுதியில் திருமணம் நின்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.