ஷங்கர் போட்ட அதிரடி கண்டிஷன் - விரைவில் அதிதிக்கு திருமணம்?
பிஸியாக நடித்து வரும் நடிகை அதிதி ஷங்கருக்கு திருமணம் செய்து வைக்கும் முடிவில் இயக்குனர் ஷங்கர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிதி ஷங்கர்
கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமான நடிகை அதிதி ஷங்கர். பிரமாண்ட இயக்குனரான ஷங்கரின் மகளான இவர் அடுத்து அண்மையில் வெளியான சிவகார்த்திகேயனின் "மாவீரன்" படத்திலும் நாயகியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட்டானதால், அவர் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
ஷங்கர் போட்ட கண்டிஷன்
நடிக்க ஆர்வமுடன் அதிதி ஷங்கர் தயாரான போது, ஓரிரு படங்களில் நடித்து விட்டு படங்களில் இருந்து ஒதுக்கிவிட வேண்டுமென ஷங்கர் அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது அதிதி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியிருக்கும் நிலையில், அவருக்கு புது கண்டிஷன் ஒன்றை ஷங்கர் போட்டுள்ளார்.
அதாவது அதிதி ஷங்கருக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கியுள்ள ஷங்கர், அதற்குள் எத்தனை படம் வேண்டுமோ நடித்து விட்டு, பின்னர் நிச்சயமாக திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்றும் கண்டிஷன் முன்வைத்திருக்கிறாராம்.

விடுதலைப்புலிகளின் பணத்திற்கு என்ன நடந்தது..! கே. பி - கோட்டா டீல்: அம்பலப்படுத்தும் பொன்சேகா IBC Tamil

இறுதி தருவாயில் மகிந்தவுக்கு அழைப்பு விடுத்த லசந்த: மாட்டைச் சுடும் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை IBC Tamil
