பெண்களின் திருமண வயது 18 ஆக உயர்வு - மலேசியாவில் சட்டமசோதா நிறைவேற்றம்

Malaysia
By Nandhini Jul 19, 2022 10:18 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

திருமண வயது 18 ஆக உயர்வு

கோலாலம்பூர், மலேசியாவின் கெடா மாநிலத்தில் சட்டசபை கூட்ட தொடரில் முதல் மந்திரி முகமது சனூசி முகமது நூர் திருமணம் தொடர்புடைய திருத்த சட்டமசோதா ஒன்று அவையில் உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியுள்ளார்.

இதனையடுத்து, முஸ்லிம் பெண்களின் சட்டப்பூர்வ வயது 16லிருந்து 18 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

ஆனால், குறைந்தபட்ச வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்ள அனுமதி கோருபவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், அவர்கள் இஸ்லாமிய கோர்ட்டிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், கோர்ட் ஒப்புதல் இல்லாமல் திருமணம் செய்து கொள்பவர்களுக்கான அபராத தொகையை 3 ஆயிரம் ரிங்கிட் ஆக உயர்த்தப்படுவதாக மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. 

marriage