எய்டன் மார்க்ரமின் ருத்ர தாண்டவத்தில் சிதைந்த வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஷிம்ரான் ஹெட்மையர் 48 ரன்கள்
டி20 உலகக்கோப்பை தொடங்க உள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடுகிறது.

நேற்று போலண்டில் நடந்த முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. பிரண்டன் கிங் 27 ரன்களும், சேஸ் 22 ரன்களும் விளாசி ஆட்டமிழக்க, அதிரடியில் மிரட்டிய ஷிம்ரான் ஹெட்மையர் 32 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார்.
ரோவ்மன் பௌல் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்கள் விளாச, வெஸ்ட் இண்டீஸ் அணி 173 ரன்கள் குவித்தது.
ஜார்ஜ் லிண்டே 3 விக்கெட்டுகளும், கேஷவ் மஹாராஜ் மற்றும் கார்பின் போஷ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
எய்டன் மார்க்ரம் ருத்ரதாண்டவம்
அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் லுஹுன்-ட்ரே பிரிட்டோரியஸ் 28 பந்துகளில் 44 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

எய்டன் மார்க்ரம் மற்றும் ரியான் ரிக்கெல்டன் பார்ட்னர்ஷிப் அமைக்க, தென் ஆப்பிரிக்கா 17.5 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ருத்ரதாண்டவம் ஆடிய எய்டன் மார்க்ரம் 47 பந்துகளில் 86 ரன்களும், ரியான் ரிக்கெல்டன் 32 பந்துகளில் 40 ரன்களும் விளாசினர்.