உதகை மார்க்கெட் வியபாரிகள் கோரிக்கை .. அடிப்படை வசதிகள் இல்லையென குற்றச்சாட்டு
உதகை தினசரி மார்க்கெட் வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்கிய இடத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என உதகை நகர வியாபாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக உதகை நகராட்சி தினசரி மார்க்கெட்டில் இயங்கிவந்த 160 காய்கறி கடைகள் இன்று முதல் நகரில் உள்ள சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டது.
தற்போது,மாற்று இடத்தில் போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குறிப்பாக மைதானத்தில் பல்வேறு அடிப்படை தேவைகள் எதுவும் இல்லை என தெரிவித்தனர்.
மேலும் தங்களின் பொருட்களுக்கு பாதுகாப்பு பணிக்காக காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும், காலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், வயதான பெண்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
ஆகவே,.
கடந்த வருடம் ஊரடங்கின் போது, மார்க்கெட் பகுதியில் தங்களுக்கு சுழற்சிமுறையில் கடைகளை நடத்த அனுமதி வழங்கியது போன்று இந்த முறையும் A B என்ற முறையை கொண்டு வர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.