காணும் பொங்கல் கொண்டாட்டம்: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை
சென்னையில் காணும் பொங்கல் தினத்தையொட்டி, கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பின், கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்பட்டு, பல்வேறு கெடுபிடிகளுடன் விற்பனை நடந்து வருகிறது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, மூன்று நாட்களில், இங்கு, 500 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடந்துள்ளது. கரும்பு விற்பனை மட்டுமே, எதிர்பார்த்த அளவிற்கு இந்தாண்டு நடக்கவில்லை. கோயம்பேடு மார்க்கெட் பராமரிப்பு பணிகளுக்கு, மாதத்தில் இரண்டு ஞாயிற்றுகிழமையில் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
காணும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, இன்று மார்க்கெட்டிற்கு வியாபாரிகள் விடுமுறை அறிவித்துள்ளனர். இதற்கு மாற்றாக, ஞாயிற்றுகிழமை விற்பனை நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.