அமெரிக்கா வன்முறைக்கு ட்ரம்ப் தான் காரணம்: மார்க் ஜுக்கர்பெர்க் வாக்குமூலம்
கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி அதிபர் தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்க அமெரிக்க நாடாளுமன்றம் கூடியபோது ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் ஐந்து பேர் உயிரழந்தனர்.
இதற்கு ட்ரம்ப் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. வன்முறைக்கு முன்பாக தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசினார் ட்ரம்ப். இதனைத் தொடர்ந்து ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபராக பொறுப்பேற்றனர்.
நாடாளுமன்ற வன்முறை தொடர்பாக ட்ரம்ப்பை விசாரிக்க வேண்டும் என குரல்கள் எழுந்தது. அதற்குப் பிறகு ட்ரம்ப்பின் அனைத்து சமூக ஊடக கணக்குகளும் முடக்கப்பட்டன. நாடாளுமன்ற வன்முறை தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதில் கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது வாக்குமூலம் அளித்த ஃபேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க், “ட்ரம்ப் தான் வன்முறைக்கு காரணம். அவரின் பேச்சுக்கள் தான் வன்முறையைத் தூண்டியுள்ளன. இதற்கு அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.