ஐபிஎல் 2022 போட்டிகளில் இருந்து விலகிய முக்கிய வீரர் : குழப்பத்தில் அணி நிர்வாகம், அதிர்ச்சியில் ரசிகர்கள்
injury
ipl2022
markwood
lucknowteam
By Swetha Subash
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் வருகிற 26-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
இந்தாண்டு முதல் ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக சேர்ந்துள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகி உள்ளார்.
மார்க் வுட் லக்னோ அணிக்காக ஆடவிருந்த நிலையில் தற்போது அவர் விலகியுள்ளது லக்னோ அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கப்போகிறது.
கடந்த மாதம் நடந்த ஐ.பி.எல் ஏலத்தில் லக்னோ அணி மார்க் வுட்டை ரூ.7.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.