ஒரு கேப்டனே இப்படி செய்யலாமா? - இங்கிலாந்து போட்டியில் நடைபெற்ற சிறப்பான சம்பவம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் செய்த செயல் ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் ஆண்டிகுவா மைதானத்தில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து முதல் இன்னிங்ஸில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 142 ரன்களும், விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் 42 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. இதனிடையே 2 ஆம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் பவுலிங் செய்துவிட்டு பவுண்டரி லைனில் நின்றுகொண்டு இருந்தார். அப்போது இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் அணி வீரர்களை ஆலோசனைக்கு அழைத்தார்.
இதனை மார்க்வுட் கவனிக்கவில்லை. இதனால் ஜோ ரூட் தலைமையில் 9 வீரர்கள் மட்டும் குழுவாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கடந்த பிறகுதான் மார்க் உட் அதை கவனித்தார். உடனே தானும் ஆலோசனையில் பங்கேற்றதைப் போல் நின்ற இடத்திலேயே வீரர்கள் தோள் மீது கை வைப்பதுப்போல் சைகை செய்தார். இந்த சம்பவம் ரசிகர்கள், வர்ணனையாளர்கள் இடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
Joe Root wanted a team huddle, but there was one player missing...
— Cricket on BT Sport (@btsportcricket) March 9, 2022
Classic Mark Wood ?#WIvENG pic.twitter.com/RRUlBwoOGW