வெளியேறும் வீரர்கள்.. சிக்கலில் இங்கிலாந்து அணி
இங்கிலாந்து அணியில் இருந்து அடுத்தடுத்து காயம் காரணமாக வீரர்கள் விலகி வருவது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியையும் வெல்லும் முனைப்புடன் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தோள்பட்டை காயம் காரணமாக இங்கிலாந்து பவுலர் மார்க்வுட் இந்தப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடாதது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
லார்ட்ஸ் டெஸ்டில் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், புஜாரா என முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார்.
இதனிடையே ஏற்கனவே அணியில் காயம் காரணமாக ஸ்டூவர்ட் பிராட், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் விளையாட நிலையில் தற்போது மார்க்வுட்டும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.