லக்னோ அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல் - கடும் கோபத்தில் கே.எல்.ராகுல்
ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் முக்கிய வீரர் விலகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதனிடையே நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
இதில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியில் டிகாக், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹோல்டர், ஆவேஷ் கான், எவின் லீவிஸ் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளதால் அந்த அணி பலம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
இந்நிலையில் லக்னோ அணியின் முன்னணி பந்துவீச்சாளரான மார்க் வுட் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த மார்க் வுட் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த அணி ஒரு வாரத்திற்குள் புதிய வீரரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில், புதிதாக ஒரு வீரரை ஒப்பந்தம் செய்து அவர் குவாரண்டைனை முடித்துவிட்டு வர குறைந்தது 2 வாரங்கள் ஆகலாம் என்பதால் லக்னோ அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.