அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக உத்தரவு

By Fathima Jul 04, 2026 03:41 AM GMT
Report

சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் மரிய வில்சனின் சகோதரர் வீடு அமைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வீடு புகுந்து மரிய வில்சன் தாக்கியதாக கூறப்படுகிறது, இதுகுறித்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ள போலிசார், புதச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இதற்கிடையே சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு அவர் அமைச்சரானார், விசாரணைக்கு ஆஜராகாததால் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று கட்டாயம் ஆஜராகவேண்டுமென புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக உத்தரவு | Mariya Vilson Puducherry Court