உலக வரலாற்றில் இடம் பிடித்த தமிழக பெண் - குவியும் பாராட்டு

Marine pilot First Women
By Thahir Oct 22, 2021 06:32 AM GMT
Report

சென்னையைச் சேர்ந்த ரேஷ்மா நிலோபர் கடல் பைலட்டாக பதவி ஏற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். இவரே இந்த பதவியை ஏற்கும் முதல் பெண்மனியாவார்.

ரேஷ்மா நிலோபர் கப்பலை கடலில் இருந்து துறைமுகத்திற்கு எடுத்துச் செல்வது மிகவும் சவாலான வேலை தான். கடலில் கப்பல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தனி தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டும்.

உலக வரலாற்றில் இடம் பிடித்த தமிழக பெண் - குவியும் பாராட்டு | Marine Pilot First Women

அதிலும் இவர் 223 கிமீ தூரத்தை கடக்க உள்ளார், அதில் 148கிமீ ஹூக்லி வழி செல்லும் அதிக வளைவுகள் மற்றும் தடைகள் கொண்ட அபாயமான வழியாகும்.

இதற்காக ரேஷ்மா கொல்கத்தா துறைமுகத்தில் பயிற்சிபெற்று வருகிறார். கடல் தொழில்நுட்பப் பொறியியல் படித்த ரேஷ்மா 2011-ல் கொல்கத்தா துறைமுகத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

அதில் இருந்து கடற்படை மாணவியாக ஒரு வருடம் பயிற்சிபெற்று முதல் மற்றும் இரண்டாம் நிலை தேர்ச்சி சான்றிதழை பெற்றுள்ளார்.

மேலும் கொல்கத்தா துறைமுகம் நடத்திய மூன்றாம் தரம் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆறு மாதத்தில் கடல் பைலட்டாக அமர பயிற்சிபெற்று வருகிறார்.

தற்பொழுது ரேஷ்மா சிறிய கப்பல்களை ஓட்டி அனுபவம் பெற்ற பிறகு அடுத்தகட்டமாக தரம் 1 மற்றும் 2-ல் உள்ள பெரிய கப்பல்களை வழி நடத்துவார். அதாவது 70000 டன் எடை கொண்ட 300 மீட்டர் நீளம் கொண்ட கப்பல்கள் அவை.