அஜித்துடன் படம் பண்றேன் அடுத்து ....நிறைவேறாமலே போன மாரிமுத்துவின் ஆசை..!!
நடிகர் அஜித்துடன் நிறைவை பேச வேண்டும் என மாரிமுத்து பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தது தற்போது வைரலாகி வருகிறது.
மாரிமுத்து
சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர் மாரிமுத்து தற்போது திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. இன்று காலை எதிர்நீச்சல் தொடருக்காக டப்பிங் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் மரணமடைந்துள்ளார்.
அவரின் மறைவிற்கு பல திரைத்துறை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் அவர் நடிகர் அஜித் குறித்து பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அஜித்துடன் நடிக்கணும்
அந்த பேட்டியில், தான் அஜித்துடன் நடிகரான பிறகு தற்போது வரை நடிக்கவில்லை என குறிப்பிட்ட மாரிமுத்து விரைவில் அவருடன் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் என தெரிவித்தார்.
அவருடன் மீண்டும் நிறைய பேச வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும், தன் மகனை பிரபல பள்ளியில் சேர்தது மட்டுமில்லாமல், அதனை தொடர்ந்து அடுத்த 8 வருடங்களுக்கு அஜித்தே தனது மகனுக்கு கல்வி கட்டணம் செலுத்தினார் என்றும் குறிப்பிட்டுள்ளார். வாலி, ஆசை போன்ற படங்களில் அஜித்துடன் இணை இயக்குனராக பணிபுரிந்த மாரிமுத்து அவருடன் நடிகராக பயணிக்க எண்ணிய ஆசை நிறைவேறாமலே போயுள்ளது.