லவ் லெட்டருடன் புது 10 ரூபா நோட் அனுப்புவாரு...மாரிமுத்துவின் லவ் ஸ்டோரி..!!
மறைத்த நடிகர் மாரிமுத்துவின் இழப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்து வரும் நிலையில், அவரின் காதல் கதை குறித்தான செய்திகள் வெளிவந்துள்ளன.
மாரிமுத்து
இயக்குனராக, நடிகராக பணியாற்றிய மாரிமுத்து சின்னத்திரை தொடரான எதிர்நீச்சல் தொடரின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி, தன் திரைத்துறை வாழ்க்கையில் மிக பெரிய உச்சத்தை எட்டினார்.
மிகவும் பிரபலமான நிலையில், பிஸியான நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று காலை அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் திரைரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
காதல் கதை
இந்நிலையில் இவரின் காதல் குறித்தான செய்திகள் தற்போது வைரலாகி வருகின்றது. அந்த பேட்டியில், தான் ஒன்பதாவது படிக்கும் போதே இவள் தான் தன்னுடைய மனைவி என்று தனக்குத் தெரியும் என கூறிய மாரிமுத்து, அப்போது தான் பார்க்காத போது அவளும், அவள் பார்க்காத போது தானும் பார்த்துக்கொள்வோம் என வேடிக்கையாக சொன்னார்.
அப்போது பேசிய அவரது மனைவி, தனக்கும் இவருக்கும் கல்யாணம் என்று முடிவான உடன் தனக்கு இவர் கடிதம் எழுதுவார் என்றும் அந்த கடிதத்தில் ஒரு 10 ரூபாயை பின் செய்து அனுப்புவார் என கூறினார். அதற்கு தான் பூ வாங்கிக்கொள்ள வேண்டும். அந்த ரூபாய் நோட்டு புது நோட்டாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.