யூடியூபர் மாரிதாஸ் கைது - சென்னை பத்திரிகையாளர் மன்றம் வரவேற்பு

arrest tamil nadu tn police youtuber maridhaas commenting over dmk
By Swetha Subash Dec 11, 2021 03:01 PM GMT
Report

சமூக வலைத்தளங்களில் பிரபலமாக திகழும் மதுரையைச் சேர்ந்த மாரிதாஸ், வலதுசாரி சிந்தனையாளராக அறியப்படுகிறார்.

இவர் ‘மாரிதாஸ் ஆன்சர்ஸ்’ என்ற பெயரில் நடத்தி வரும் யூடியூப் சேனலில் திமுகவை கடுமையாக விமர்சித்து வீடியோக்கள் வெளியிட்டு வந்தார்.

சமீபத்தில் அவருடைய டிவிட்டர் பக்கத்தில், "திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா.

தேசத்திற்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக் கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதி வேலை நடக்கவும் சாத்தியம் உண்டு.

பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்" என்ற வார்த்தைகளுடன் பதிவிட்டு இருந்தார்.

அந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய பின்னர் அதை தனது பக்கத்தில் இருந்து நீக்கியிருந்தார்.

அதனை தொடர்ந்து மதுரை புதூர் காவல்நிலைய போலீசார், 153 A,505 ஆகிய பிரிவுகளில் சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பிரச்சாரம் செய்தல், அரசு உயர் அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் பதிவிடுதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் யூடியூபர் மாரிதாஸை கைது செய்தது வரவேற்கத்தக்கது என சென்னை பத்திரிகையாளர் மன்றம் அறிக்கையின் மூலம் தெறிவித்துள்ளது.