இனவெறி சர்ச்சை: கண்ணீருடன் கடிதம் எழுதிய இங்கிலாந்து வீரர்

Euro Cup 2021 Marcus Rashford
By Petchi Avudaiappan Jul 13, 2021 02:35 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கால்பந்து
Report

இனவெறி விமர்சனங்களால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து கால்பந்து அணி வீரர் மார்கஸ் ராஷ்போர்ட் மனவேதனையுடன் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நேற்று நடந்த யூரோ கால்பந்து கோப்பை இறுதி போட்டியில் இத்தாலியிடம் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது. இதனால் ஆத்திரமடைந்த இங்கிலாந்து ரசிகர்கள் சொந்த நாட்டு அணி வீரர்கள் என்றும் பாராமல் 3 பேரை இனவெறி ரீதியாக ரசிகர்கள் சாடியிருந்தனர்.

இரு அணிகளுமே தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி சமனனானது. எனவே பெனால்ட்டி ஷூட் அவுட் முறை அறிவிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்தின் மார்கஸ் ராஷ்போர்ட், ஜாடன் சான்சோ, சாகா ஆகிய மூவரும் கோல் அடிக்க தவறிவிட்டனர். அவர்கள் மூன்று பேரும் வேறு வேறு இனப் பின்னணியை கொண்டவர்கள்.

இனவெறி சர்ச்சை: கண்ணீருடன் கடிதம் எழுதிய இங்கிலாந்து வீரர் | Marcus Rashford Sorry For Missing Penalty Euro

இந்நிலையில் நான் மார்கஸ் வயது 23, கருப்பினத்தவன். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அனைவரும் என்னிடம் அணியின் வெற்றிகாக கோல் ஒன்றை எதிர்பார்த்தீர்கள், எனது தூக்கத்தில் கூட பெனால்டி ஷாட் அடிப்பது குறித்து சிந்தித்திருந்தேன். அப்படி இருக்கையில் ஏன் களத்தில் கோல் அடிக்க முடியவில்லை என்ற கேள்வி என் மண்டைக்குள் ரணத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனை விளக்க வார்த்தைகளே இல்லை. நான் வேறு வகையான ஷாட்டை முயற்சித்திருக்க வேண்டும். 

இறுதிப்போட்டி, 55 வருட கனவு, ஒரே ஒரு பெனால்டி ஷாட். இவை அனைத்திற்கு தற்போது என்னால் சொல்லக்கூடிய ஒன்றே ஒன்று ‘மன்னிப்பு' மட்டுமே. ஆனால் எனது பிறப்பிடம், எனது நிறம் ஆகியவற்றிற்கெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது. நான் இங்கிலாந்தின் 3 சிங்க சின்னங்களை நெஞ்சில் ஏந்துவதற்கு பெருமை கொள்கிறேன். இது எனது கனவு. இனவெறி விமர்சனங்களை கடந்து செல்வேன் என மார்கஸ் ராஷ்போர்ட் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.