சட்டென குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

Tamil nadu Today Gold Price
By Sumathi Mar 25, 2023 06:37 AM GMT
Report

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை

தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.

சட்டென குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா? | March 25 Gold And Silver Rate

கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. அதன்படி, கடந்த சில நாட்களாக அதிகரித்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.

குறைவு

அதன் அடிப்படையில், சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,550க்கு விற்பனையாகிறது.

மேலும் வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 76க்கு விற்பனை ஆகிறது. மேலும் 1 கிலோ வெள்ளி 76,000க்கும் விற்பனை ஆகிறது.