சற்று குறைந்த நிலையில் மீண்டும் தங்க விலை அதிரடி உயர்வு!
தங்கம் விலை கடந்த 2 தினங்களாக குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.
கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. அதன் படி 2 நாட்களாக விலை சரிவை கண்டு வந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன் அடிப்படையில், கிராமுக்கு 40 உயர்ந்து 5,540க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சவரனுக்கு உயர்ந்து 560 உயர்ந்து 44,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை 1.40 உயர்ந்து 75.40க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் திடீர் விலையேற்றம் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.